என்னும் பெருங் கோயிலுள் இவ் விருவர் படி மங்களையும் நிறுவினார்
குந்தவைப் பிராட்டியார்.
உத்தம சோழன்
கண்டராதித்தருடைய திருமகனாய்த் தோன்றிய உத்தம சோழன்
பதினைந்து ஆண்டுகள் ஆட்சி
புரிந்தான். இவன் பெயரால் எழுந்த ஊர்கள்
சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் கொங்கு
நாட்டிலும் உண்டு.
தஞ்சைநாட்டில் நன்னில வட்டத்தில் உள்ள உத்தம
சோழபுரம் என்னும்
ஊரும், தென்னார்க்காட்டுச்
சிதம்பர வட்டத்திற் காணப்படும் உத்தம சோழ
மங்கலமும் செங்கற்பட்டு
மதுராந்தக வட்டத்திலுள்ள உத்தம நல்லூரும்,
சேலம் நாட்டிலுள்ள உத்தம சோழபுரமும் இவன்
ஆண்ட நாட்டின் பரப்பை
ஒருவாறு காட்டுகின்றன. மதுரையை ஆண்ட வீர பாண்டியனோடு இவன்
போர் புரிந்து அவன் தலை கொண்டான் என்று சாசனம் அறிவிக்கின்றது.71
அவ் வெற்றியின்
அடையாளமாக இவனும் மதுராந்தகன் என்னும் விருதுப்
பெயர் கொண்டான் என்பர்.
இராஜராஜன்
உறந்தையைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னருள் சிறந்தவன்
திருமாவளவன் என்று தமிழ்
இலக்கியம் கூறுவது போலவே, தஞ்சையைத்
தலைநகராகக் கொண்ட சோழர் குலத்தைத்
தலையெடுக்கச்
செய்தவன்
இராஜராஜன் என்று
சாசனம் அறிவிக்கின்றது. பத்தாம் நூற்றாண்டின்
இறுதியில்
அரசாளத் தொடங்கிய இம் மன்னன் இருபத்தைந்து |