பலவகை மரம்
கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின்
பெயர். பொன்னலரி
என்றும் அதனைக்
குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக்
கோயிலில் பொன்னலரியே தல
விருட்சமாகப்
போற்றப்படுகின்றது.
தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற
திருப்பைஞ்ஞீலி என்ற ஊரும் மரத்தின்
அடியாகப் பிறந்ததேயாகும்.
மைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக்
குறிக்கும். அவ்வகையான
வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞீலி
என்று பழந்தமிழர்
அழைத்தனர்.40
இன்னும், வாகையும் புன்னையும் வட ஆர்க்காட்டில் ஊர்ப்
பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை
வட்டத்தில் காஞ்சிரமும்,
கருங்காலியும் இரண்டு ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன. தமிழகத்தில்
ஆலும் அரசும்,அத்தியும் ஆத்தியும், புளியும் புன்னையும், பனையும்
தென்னையும், மாவும் வேம்பும்
மற்றும் பல மரங்களும் செழித்து வளர்தலால்
அவற்றின் பெயர்கள் எல்லாம் ஊர்ப் பெயர்களாக
ஆங்காங்கு வழங்கக்
காணலாம்.
நாவல் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரம் பாடிய மூவருள்
ஒருவராகிய சுந்தரர் அவ்வூரிலே
பிறந்தருளினார். ‘அருமறை நாவல் ஆதி
சைவன்’ என்று பெரிய புராணம் கூறுமாற்றால் அவர் பிறந்த ஊரும்
குலமும்
விளங்கும். அந்நாவல், சுந்தரர் தோன்றிய பெருமையால் திருநாவல்
ஆயிற்று.
ஈசனால் ஆட்கொள்ளப்பெற்ற சுந்தரர் அவரடியவராகவும்,
தோழராகவும் சிறந்து வாழ்ந்த |