நலம் புரிந்தான். உலகம் ஈடேறும் வண்ணம் எழுந்த தேவாரத்தை எடுத்து
வெளியிட்ட வேந்தனை
உய்யக் கொண்டான் என்று உயர்ந்தோர்
பாராட்டினர்.73
இராஜராஜன் விருதுப் பெயர்களை அவன் ஆட்சியில் அமைந்த
மண்டலங்கள் தாங்கி நின்றன.
ஈழ மண்டலம் (இலங்கை) மும்முடிச் சோழ
மண்டலம் என்னும் பெயர் பெற்றது. தொண்டை மண்டலம்
ஜயங்கொண்ட
சோழ மண்டல மாயிற்று. பாண்டி மண்டலம் இராஜராஜப் பாண்டி மண்டலம்
எனப்பட்டது.
அருண்மொழி
இனி, இவ்வரசன் பெயர் கொண்டு எழுந்ந ஊர்களை முறையாகக்
காண்போம். திருவாலங்காட்டுச்
செப்பேடுகளில் இராஜராஜன், அருண்மொழி
வர்மன் என்று குறிக்கப்படுகின்றான்.
அருண்மொழி என்பது அருமொழி என
மருவி வழங்குவதாயிற்று. பாண்டி
மண்டலத்தைச் சேர்ந்த கானநாட்டில்
அருமொழித் தேவபுரம் என்னும்
பெயருடைய ஊர் இருந்ததாகச் சாசனம்
அறிவிக்கின்றது.74 இன்னும்,
தஞ்சை
நாட்டிலும், தென்னார்க்காட்டிலும்
அருமொழித் தேவன் என்னும்
பெயருடைய ஊர்கள்
பலவுண்டு.75
மும்முடிச் சோழன்
தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் சோழபுரம் என்னும்
பெயருடைய ஊர் ஒன்று உள்ளது.
அதன்
முழுப்பெயர் மும்முடிச் சோழபுரம்
என்பதாகும்.76 நாஞ்சில் நாட்டில் நாகர்
கோவிலுக்கருகே யுள்ள கோட்டாறு,
மும்முடிச் சோழ நல்லூர் என
முன்னாளில் வழங்கிற்று.77 தொண்டை |