கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் விருதுப் பெயர் மூன்றும் ஊர்ப்
பெயர்களிலே
விளங்குகின்றன.
முடிகொண்ட சோழன்
சோழர் ஆட்சியில் அமைந்த கங்கபாடி என்னும் நாடு இவ்வரசன்
காலத்தில் முடிகொண்ட சோழ
மண்டலம் என்று பெயர் பெற்றது.99 பழம்
பெருமை வாய்ந்ததும், பாடல் பெற்றதுமாகிய
பழயாறை
என்ற நகரம்
முடிகொண்ட
சோழபுரம் என வழங்கலாயிற்று.100 இந்நகரம் காவிரியினின்றும்
பிரிந்து செல்லும் முடிகொண்டான் என்னும்
கிளையாற்றின் கரையில்
அமைந்துள்ளது. நெல்லை
நாட்டின் வழியாகச்
செல்லும் பொருநையாறு
முடிகொண்ட சோழப் பேராறு என்று அக்காலத்துச்
சாசனங்களில்
குறிக்கப்பட்டது.101
இன்னும், சிதம்பர வட்டத்திலுள்ள முடிகண்ட நல்லூரும், மாயவர
வட்டத்திலுள்ள முடிகொண்ட நல்லூரும்,
பாண்டி நாட்டுச் சிவகங்கை
வட்டத்திலுள்ள முடிகுண்டம் என்னும் ஊரும் இம் மன்னனது விருதுப்
பெயரைப்பெற்று விளங்குவனவாகும். கோவை நாட்டில் கொள்ளக்கால்
வட்டத்தில் முடிகுண்டம்
என்ற ஊரொன்று உண்டு. சாசனங்களில்
முடிகொண்ட சோழபுரம் என்று குறிக்கப்படும் ஊர்ப் பெயரே
இப்போது
முடிகுண்டமெனக் குறுகியுள்ளது. முடிகொண்ட சோழீச்சுரம் என்னும்
சிவாலயம் அவ்வூரிற்
காணப்படுகின்றது. அஃது இராஜேந்திர சோழன்
காலத்தில் எழுந்த திருக்கோயில் என்று
கொள்ளலாகும். அவ்வூரில் கோயில்
கொண்ட தேசிப் பெருமாள் என்னும் திருமாலுக்குக்
காவிரியாற்றின் வட
கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும், தென் கரையிலுள்ள பதினெட்டு |