128ஊரும் பேரும்

ஊர் வணிகரும் அளித்த நிவந்தங்கள் சாசனத்தால் அறியப்படுகின்றன.
இன்னும் அவ்வூரில் நகரஜினாலயம் என்று பெயர் பெற்ற சமணக் கோயிலும்
இருந்தது. சந்திர பிரப தீர்த்தங்கரர் அவ்வாலயத்தில் எழுந்தருளி
யிருந்ததாகச் சாசனம் கூறும்.102 எனவே, முடிகொண்ட சோழபுரம் சைவம்,
வைணவம் சமணம் என்னும் மும்மதங்களும் சிறந்து விளங்கிய நகரமாகத்
தோன்றுகின்றது.
 

கங்கைகொண்ட சோழன்

    இராஜேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கை
கொண்டான் என்பதாகும். அப்பெயரால் எழுந்த கங்கை கொண்டான்
என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.103
 

கடாரம் கொண்டான்

    கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான்
இாஜேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம்
மன்னன் வென்று, இவ் விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு
மாயவரம் வட்டத்தில் கடாரம் கொண்டான் என்பது ஓர் ஊர்ப் பெயராக
வழங்குகின்றது. தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் கடாரங் கொண்ட
சோழபுரம் இருந்ததென்று சாசனம் கூறும்.104

 

குலோத்துங்க சோழன்


    இராஜேந்திர சோழனுக்குப் பின் அரசாண்ட மன்னரில் பெருமை
சான்றவன் முதற் குலோத்துங்க சோழன். கலிங்கத்துப் பரணியிற்
பாராட்டப்படுகின்ற சிறந்த அரசன் இவனே. கருணாகரத் தொண்டைமான்