என்னும் படைத்தலைவன் இச் சோழ மன்னனது ஆணையால் கலிங்க
நாட்டின் மீது படையெடுத்து வெற்றியும்
புகழும் பெற்ற செய்தியைக்
கலிங்கத்துப் பரணி எடுத்துரைக்கின்றது.
குலோத்துங்கன் திரிபுவனச்
சக்கரவர்த்தி
முதலாய பட்டங்களைத் தாங்கி நின்றான்.
சுங்கந்தவிர்த்த
சோழன் என்னும்
விருதுப் பெயரும் அவனுக்குரிய தாகும்.
தஞ்சாவூரின்
அருகேயுள்ள கருந்திட்டைக்குடி அம் மன்னன்
காலத்தில்
சுங்கந்தவிர்த்த
சோழ நல்லூர் என வழங்கலாயிற்று.
முதற் குலோத்துங்க சோழன் தன் தேவியாகிய கம்பதேவியின்
விருப்பத்திற் கிணங்கித் தொண்டை
நாட்டுச் சிற்றீசம்பாக்கம் என்ற
ஊருக்குக் கம்பதேவி நல்லூர் எனப் பெயரிட்டுக்
காஞ்சிபுரக் கோவிலுக்கு
நிவந்தமாக அளித்தான் என்னும் செய்தி ஒரு சாசனத்தால்
விளங்குகின்றது.105
தீன சிந்தாமணி
இன்னும், குலோத்துங்கன் தேவியாகிய தீன சிந்தாமணியின் பெயரால்
அமைந்த ஊர்கள் சில
உண்டு. தென் ஆர்க்காட்டிலுள்ள சிந்தாமணி
என்னும் ஊர் முன்னாளில் தீன சிந்தாமணி நல்லூர் என வழங்கிற்று.106
எனவே, சிந்தாமணி என்பது அதன்
குறுக்கமாகத் தோன்றுகின்றது. இன்னும்,
வட ஆர்க்காட்டிலுள்ள கடைக்கோட்டுப் பிரம தேசம், தீன சிந்தாமணி
சதுர்வேதி மங்கலம்
என்று |