130ஊரும் பேரும்

சாசனங்களிற் குறிக்கப்படுதலால் அவ்வூரும் இத் தேவியின் பெயர் தாங்கி
நிற்பதாகத் தெரிகின்றது.107
 

அநபாய சோழன


    இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு அநபாயன் என்ற சிறப்புப் பெயர்
உண்டு. அப் பெயர் சில ஊர்களுக்கு அமைந்தது. சோழ மண்டலத்தில்
ஜயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டில் அநபாய புரம்
என்னும் பெயருடைய ஊர் ஒன்று இருந்ததாகச் சாசனம் கூறுகின்றது.108
தொண்டை நாட்டில் அரும்பாக்கம் என்னும் ஊரில் இருந்த சில நிலங்களை
ஓர் எடுப்பாகச் சேர்த்து, அநபாய நல்லூர் என்று பெயரிட்டுத் திரு ஆலக்
கோயிலுடையார்க்கு அளித்தான் அநபாய சோழன்.109
 

மூன்றாம் குலோத்துங்கன்

   மூன்றாம் குலோத்துங்கன் காலத்துச் சாசனத்தால் தென் ஆர்க்காட்டு
வேலூரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் விளங்கிற்று என்பது
தெரிகின்றது. இம் மன்னன் பெயரால் உண்டாகிய குலோத்துங்க சோழ
நல்லூர் அத்திருக் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்டது.110

திரிபுவன வீரன்

   தஞ்சை நாட்டில் கும்பகோணத்துக்கும், திருவிடை மருதூருக்கும்
இடையே திரிபுவனம் என்ற ஊர் மூன்றாம் குலோத்துங்கன் சிறப்புப்
உள்ளது. பெயர்களில் ஒன்று திரிபுவன வீரன் என்பதாகும். அப் பெயரால்
அமைந்த ஊர் திரிபுவன வீரபுரம் என்ற பெயர் பெற்றுத் திரிபுவன மாயிற்று.
அவ்வூரில் சிறந்து விளங்கும்