132ஊரும் பேரும்

இப்பொழுது அவ்வூர் பரமேஸ்வர நல்லூர் என்று அழைக்கப்படுகின்றது.
 

வானவன் மாதேவி

    இன்னும், வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன்
மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் தென்ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில
வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது.114 செங்கற்பட்டுக் காஞ்சிபுர
வட்டத்தில் வானவன் மாதேவி என்பது ஓர் ஊர். அங்கு எழுந்த சிவாலயம்
வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது. பழைய வெண்குன்றக்
கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று
சாசனம் கூறும். அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.115
 

சாமந்தர்

    இன்னும் செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் மானாமதி
என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பழமையான கோவில்
திருக்கரபுரம் என முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்பொழுது
ஊர்ப் பெயராக வழங்கும் மானாமதி என்பது வானவன் மாதேவியின்
சிதைவாகும். இராஜேந்திர சோழன் காலத்தில், அவ்வூரில் திருக்
கயிலாயநாதர் கோயில் எழுந்தது. அதன் அருகே காணப்படுகின்ற அகரம்
என்னும் ஊரும் அம் மன்னனால் உண்டாக்கப்பட்டதே யாகும்.116

    தஞ்சைச் சோழ மன்னர் ஆட்சியில் அவர்க்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்
பலர் இருந்தனர். கொங்குராயன், சேதிராயன், மழவராயன், பல்லவராயன்
முதலியோர்