சாமந்தராய்ச் சோழ நாட்டின் பல பாகங்களைக் கண்காணித்து வந்ததாகத்
தெரிகின்றது. தென்
ஆர்க்காட்டிலுள்ள
கொங்குராய பாளையம்,
கொங்குராயனூர்
முதலிய ஊர்களும், நெல்லை நாட்டிலுள்ள
கொங்குராய
குறிச்சியும் அக்காலத்திய கொங்குராயர் பெயரை
நினைவூட்டுகின்றன.
சேதிராயப் பெயர் தென் ஆர்க்காட்டிலுள்ள சேதிராய நல்லூர்,
சேதிராயன் குப்பம் முதலிய
ஊர்களிலும், நெல்லை நாட்டிலுள்ள சேதிராய
புத்தூரிலும் விளங்குகின்றது. இன்னும் தென் ஆர்க்காட்டிலுள்ள
மழவராயனூர், மழவராய நல்லூர் முதலிய ஊர்களும், இராமநாதபுரத்திலுள்ள
மழவராயனேந்தல் என்னும்
இடமும் மழவராயரோடு தொடர்புடையன. இனி,
பல்லவராயன் பெயர் பல ஊர்களில் காணப்படுகின்றது.
பல்லவராயன்
பாளையம், பல்லவராய நத்தம், பல்லவராயனேந்தல், பல்லவராயன் மடை
முதலிய
ஊர்கள் நாட்டில் பல பாகங்களிற் காணப்படும்.
மராட்டிய
மன்னர்
சோழ மன்னரது ஆதிக்கம் நிலைகுலைந்த பின்பு, பதினேழாம்
நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை
நாட்டில் மராட்டிய மன்னரது ஆட்சி நிலை
பெறுவதாயிற்று. இந்திய சரித்திரத்தில்
புகழ் பெற்று
விளங்கும் வீர சிவாஜி
மன்னனது தம்பியாகிய எக்கோசி
என்பவன் தஞ்சையில் மராட்டியர்
ஆட்சியை நிலை பெறுத்தினான். தஞ்சை
நாட்டிலுள்ள எக்கோசி மகாராச
புரம் என்னும் ஊர்
அவன் பெயரால்
இன்றும் நிலவுகின்றது. எக்கோசியின்
மகன்
|