குலமும் கோவும் 137

புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி
என்ற ஊர் சிறந்திருந்தது.

     
“தென்திசை ஆஅய் குடியின் றாயின்
      பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே”121

என்று மோசியார் அதன் பெருமையைப் புனைந் துரைத்தார். இவ்வூர்
இன்றும் பொதியமலைச் சாரலில் உள்ளது.
 

காரி


   கடைவள்ளல் எழுவரில் காரி என்பவன் ஒருவன். அவன் சிறந்த குதிரை
வீரன். சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரி என்று அவன்

குறிக்கப்படுகின்றான். சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள
கார்குடி என்னும் ஊர் அச்சிற்றரசனோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது.
சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது.122 சேலம்
நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.
 

ஓரி

   திருமுடிக் காரியின் பெரும் பகைவன் ஓரி என்பவன். அவன்
வில்லாளரிற் சிறந்த வீரன்; சிறந்த கொடையாளன். வல்லில் ஓரி என்று
பண்டைப் புலவர்கள் அவனைப் பாராட்டினார்கள். கோவை நாட்டுப் பவானி
வட்டத்தில் ஓரிசேரி என்னும் ஊர் உள்ளது.
 

குமணன்


   கடையெழு வள்ளல்களின் காலம் கழிந்த பின்பு கொங்கு நாட்டுக்
குறுநில மன்னனாகிய குமணன் சிறந்த கொடையாளனாக விளங்கினான்.
முதிரம் என்னும் மலையும், அதைச் சேர்ந்த நாடும் அவன் ஆட்சியில்
ஆட்சியில்அமைந்திருந்தன. குமணண் வார்ந்த ஊர் குமணம் என்று