பூதன்
பெண்ணையாற்றின் அருகேயுள்ளது புல்வேளூர் என்ற ஊர். இவ்வூர்
தொண்டை நாட்டு எயிற் கோட்டத்தைச்
சேர்ந்ததென்று சாசனம் கூறும்.125
தமிழ்
இலக்கியத்திலும் இவ்வூர் இடம் பெற்றுள்ளது.
நல்லிசைப்
புலவராகிய
ஒளவையாரை ஆதரித்த பூதன் என்னும் புரவலன்
இவ்வூரில் விளங்கினான்
என்பது,
“பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும்”
நினைந்து பாடும் ஒளவை வாக்கால் அறியப்படும்.126 புல்வேளூர் என்பது
இப்போது புல்லலூர்
எனத் திரிந்துள்ளது.
மகமதியரும் கிருஸ்துவரும்
வாலாஜா
தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத்
தலைவர்கள் பெயரால் அமைந்த
ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில்
ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு
வாலாஜா என்னும் பெயரும்
உண்டு. அப்
பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாஜா பேட்டைக்கு
அமைந்துள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாஜாவின்
அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று
சரித்திரம் கூறும்.
பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம் சில காலம்
சிறந்து
விளங்குவதாயிற்று.
இன்னும், உடையார் பாளையத்திலுள்ள வாலாஜா நகரமும், பாலாற்றங்
கரையிலுள்ள வாலாஜாபாத் |