14ஊரும் பேரும்

கோட்டை கொத்தளங்களையுடையதாய் வேலூர் சிறப்புற்றபோது ஆதியில்
உண்டாகிய வேலப்பாடி அதன் அங்கமாய் அமைந்துவிட்டது.45
தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற ஊராகிய திருவலிதாயம் இப்பொழுது
பாடியென்றே அழைக்கப்படுகின்றது.46

  பட்டி

    பட்டி என்னும் சொல்லும் முல்லை நிலத்து ஊர்களைக் குறிக்கும்
என்பர். தமிழ்நாடு முழுதும் பட்டிகள் காணப்படினும் பாண்டி நாட்டிலேயே

அவை மிகுதியாக உள்ளன. கோவிற்பட்டி முதலிய ஆயிரக்கணக்கான

பட்டிகள் தென்னாட்டில் உண்டு.

 
மந்தை

    ஆடு மாடுகள் கூட்டமாகத் தங்குமிடம் மந்தை எனப்படும். வட

ஆர்க்காட்டில் வெண் மந்தை, புஞ்சை மந்தை முதலிய ஊர்கள் உள்ளன.47

நீலகிரியில் தோடர் எனும் வகுப்பார் குடியிருக்கும் இடத்திற்கு மந்து என்பது
பெயர்.48 மாடு மேய்த்தலே தொழிலாகக் கொண்ட தோடர் உண்டாக்கிய

ஊர்களிற்சிறந்தது ஒத்தக்க மந்து என்பதாகும். அபபெயர் ஆங்கிலமொழியில்
ஒட்டகமண்டு எனத் திரிந்தும், ஊட்டி எனக் குறுகியும் வழங்கி வருகின்றது.
ஒத்தைக்கல் மந்தை என்பதே இவ்வாறு சிதைந்து வழங்குவதாகத்

தெரிகின்றது.
 

                   மருத நிலம்

ஆறு

    நிலவளமும், நீர்வளமும் உடைய தமிழ் நாட்டில் நினைப்பிற்கு எட்டாத
காலந் தொட்டுப் பயிர்த்தொழில்