140ஊரும் பேரும்

என்னும் ஊரும் முகம்மது அலியின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.

     வாலாஜா பேட்டைக்கு அருகேயுள்ள இராணிப்பேட்டையின் வரலாறு
அறியத் தக்கதாகும். செஞ்சிக் கோட்டையில் தேசிங்குராஜன் என்னும் வீரன்
சிறந்து விளங்கினான். மகமதிய நவாபாகிய சாதுல்லாகான் என்பவன் அக்
கோட்டையின்மீது படை யெடுத்தான். இருவருக்கும் கடும் போர் மூண்டது.
தேசிங்குராஜன் மாற்றார் வியப்புற வீரப்போர் புரிந்து மாண்டான். அந்
நிலையில் அவன் தேவியாகிய இராணி, கணவன் உயிரோடு தன் உயிரை
இசைவிக்கக் கருதி, உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். அப்பெண்மணியின்
பெருமை என்றும் விளங்கும் வண்ணம், இராணிப் பேட்டை என்னும்

பெயரால் புதியதோர் ஊரை உண்டாக்கினான். அது நெடுங்காலமாக ஒரு
சிறந்த படைவீடாக விளங்கிற்று.
 

கான்சாகிப்

    பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலப் படைக்குத்
துணைபுரிந்த மகமது யூசப்கான் என்பவன் தமிழ்நாட்டில் கான்சாகிப் என்று
வழங்கப்பெற்றான். அவன் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பாண்டி
நாட்டின் கவர்னராக ஆங்கிலேயர் அவனை நியமித்தனர். மதுரையைச்
சேர்ந்த கான்சாபுரமும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த கான்சாகிபு
புரமும் அவன் பெயரால் அமைந்துள்ளன.

    இன்னும் பல ஊர்கள் மகமதியப் பெயர்களைக்கொண்டு வழங்கக்
காணலாம். அவை பெரும்பாலும் பேட்டை