திருச்சி நாட்டிலுள்ள லால்குடி என்னும் ஊருக்கு அப் பெயரிட்டவர்
மகமதியரே, முன்னாளில்
தவத்துறை என்பது அதன் பெயர். அங்குள்ள
திருக்கோயிலின் செங்கோபுரத்தைக் கண்டு
லால்குடி என்று அவ்வூரை
மகமதியர் குறித்தார்கள். பாரசீக மொழியில் லால்குடி என்பதற்குச்
செம்பதுமை என்பது பொருளாம்.
சென்ற சில நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் பரவி வரும்
கிருஸ்துவ சமயத்தின் சார்பாக
எழுந்த ஊர்களும் உண்டு. நெல்லை நாட்டில்
கிருஸ்தவர்கள் மிகுதியாக வசிக்கும் பாகங்களில்
நாசரேத்து, சுவிசேஷபுரம்,
மெய்ஞ்ஞானபுரம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இன்னும்
ஆரோக்கியபுரம்,
சாந்தபுரம், சௌக்யபுரம், சந்தோஷபுரம், நீதிபுரம் முதலிய
புத்தூர்களும் சென்ற நூற்றாண்டில்
எழுந்துள்ளன. இருநூறாண்டுகளுக்கு
முன்னே தமிழ்நாட்டில் கிருஸ்துவப் பெருந்தொண்டராக
விளங்கிய
வீரமாமுனிவர் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள ஏலாக்குறிச்சி
என்னும்
பழைய ஊரின் ஒரு பாகத்தில் அடைக்கல மாதா ஆகிய தேவ
மாதாவுக்கு ஒரு கோவில் கட்டினார்;
அம்மாதாவின் அருட்காவலில்
அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; அவ்வூரில்
கோவில்
கொண்ட மாதாவின்மீது ஒரு கலம்பகம் பாடினார். அதன் பெயர்
திருக்காவலூர்க்
கலம்பகம் என்பது.
வீர மாமுனிவர் கால முதல், வேதியர் என்னும் சொல் கிருஸ்தவ
சமுதாயத்தில் உபதேசியார்களைக்
குறிப்பதாயிற்று. அன்னார்க்குரிய ஒழுக்க
முறைகளையெல்லாம் தொகுத்து, ‘வேதியர் ஒழுக்கம்’
என்னும் பெயரால்
ஓர் |