குலமும் கோவும் 147

செய்யுட்கள் நற்றிணையிற் காணப்படும். பொதும்பில் புல்லாளங் கண்ணியார்

என்னும் மற்றொரு புலவரும் முன்னாளில் வாழ்ந்தார். இம் மூவரும் பொதும்பில் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது புலனாகின்றது. பாண்டி நாட்டு மதுரை வட்டத்திலுள்ள பொதும்பு என்னும் ஊரே பழைய பொதும்பில் என்பர்.130
 

கிடங்கிற் புலவர்


    முற்காலத்தில் சிறப்புற்றிருந்த கிடங்கில் என்ற ஊரில் காவிதிப்
பட்டமும் குலபதிப் பட்டமும் பெற்ற புலவர்கள் வாழ்ந்திருந்தனர். காவிதிக்
கீரங்கண்ணனார். நாவிதிப் பெருங் கொற்றனார், குலபதி நக்கண்ணனார்
என்னும் மூவரும் கிடங்கிற்பதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாடிய பாட்டு
நற்றிணையிலும், குறுந்தொகையிலும் காணப்படும். இப்பொழுது திண்டிவனம்
என வழங்கும் ஊரின் ஒரு பாகத்தில் கிடங்கால் என்னும் பெயரோடு
அமைந்துள்ள இடமே அவ்வூர்.
 

நொச்சி நியமத்தார்

    நொச்சி நியமங் கிழார் என்னும் புலவர் பாடிய நயஞ்சான்ற பாடல்கள்
நற்றிணையிற் காணப்படுகின்றன. நியமம் என்பது கோவிலைக் குறித்தலால்
முன்னாளில் நொச்சி நியமம் தெய்வ நலம் பெற்ற ஊர்களில் ஒன்றென்று
கொள்ளலாகும். இப்பொழுது அவ்வூர்ப் பெயர் நொச்சியம்
என மருவி வழங்குகின்றது.
 

கிள்ளி மங்கலத்தார்

    கிள்ளி மங்கலங்கிழார் என்னும் புலவர் இயற்றிய பாடல்கள்
குறுந்தொகையிற் காணப்படும். சோழ மரபினர்க்,