குறிக்கப்படுகின்றது. அப் பதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், ஏனைய
தமிழ் வேந்தர்
இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்ததென்றும், அப்போரில்
பாண்டியன் பெற்ற வெற்றியின்
காரணமாகத்
தலையாலங்கானத்துச் செரு வென்ற
பாண்டியன் என்னும் பட்டம் பெற்றான்
என்றும்
பண்டைய இலக்கியம் கூறும். இத்தகைய ஆலங்காட்டைத்
திருநாவுக்கரசர் பாடியருளினார்.16
சாய்க்காடு
புலவர் பாடும் புகழுடைய பூம்புகார் நகரத்தைச் சார்ந்தது திருச்சாய்க்
காடாகும். தேவாரத்தில்
பூம்புகார்ச்
சாய்க்காடு என்றும், காவிரிப்பூம்
பட்டினத்துச்
சாய்க்காடு என்றும், அப்பதி
குறிக்கப்படுகின்றது.17 இக்
காலத்தில் சாயா வனம் என்பது அதன் பெயர்.18
திருக்கொள்ளிக்காடு
திருநெல்லிக்காவுக்குத் தென் மேற்கேயுள்ளது கொள்ளிக்காடு. அப்
பதியைப் பாடி யருளிய திருஞானசம்பந்தர்,
“வெஞ்சின மருப்போடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே”
என்று ஒரு பாசுரத்திற் குறித்தமையால் ‘கரியுரித்த
நாயனார் கோவில்’
என்னும் பெயர்
அதற்கு
அமைவதாயிற்று. இப்பொழுது அவ்வூர் தெற்குக்
காடு என வழங்கும்.19
திருவாலங்காடு
தொண்டை நாட்டுப் பழம் பதிகளுள் ஒன்று திரு ஆலங்காடு. அது
பழையனூரை அடுத்திருத்தலால்
|