தேவும் தலமும்179

புகழ் பெற்று விளங்கும் பாரியின் பறம்பு நாட்டை அணி செய்தது
அக்குன்றம். இன்று பிரான்மலை என்பது அதன் பெயர்.4
 

திருக்கழுக்குன்றம்


     ஈசன் கோயில் கொண்ட ஏனைய மலைப்பதிகளும் திருஞான சம்பந்தர்
தேவாரத்தால் விளங்குவனவாகும்.

     
“கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
      பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
      பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
      பரங்குன்றம் பருப்பதம்”

என்றெழுந்த திருவாக்கிலுள்ள கழுக்குன்றம் திருக்கழுக்குன்றம் என்னும்
சிறந்த பதியாகும். பண்டை நாளில் தொண்டை நாட்டைச் சேர்ந்தது
திருக்கழுக்குன்றம்.5 தேவாரம், திருவாசகம் ஆகிய இரு பாமாலையும் பெற்ற
அக்குன்றம்6 வேதாசலம் என்றும், வேதகிரி என்றும் வடமொழியில்
வழங்கும். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக அம் மலையில்
நாள்தோறும் உச்சிப்பொழுதில் இருகழுகுகள் வந்து காட்சியளித்தலால் பட்சி
தீர்த்தம் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது. ‘கழுகு தொழு வேதகிரி’
என்று அருணகிரிநாதர் திருப்புகழில் இந் நிகழ்ச்சியை அறிவித்தருளினார்.7
 

திருக்கயிலாயமலை

     விண்ணளாவி நிற்கும் இமயமலையில் வெள்ளியங்கிரியாக விளங்குவது
திருக்கயிலாயம். ஈசனார் வீற்றிருக்கும் மலைகளுள் ஒரு மாமலையாய்
இலங்கும் திருமாமலை அதுவே. கயிலாயம் இருக்கும்  திசை நோக்கிப்
பாடப்பட்ட தேவாரப்