180ஊரும் பேரும்

பதிகங்கள் பலவாகும். “கங்கையொடு பொங்குசடை எங்கள் இறை தங்கு
கயிலாயமலையே” என்று ஆனந்தக் களிப்பிலே பாடினார்
திருஞானசம்பந்தர். “கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி, கயிலை
மலையானே போற்றி போற்றி” என்று உளங் கனிந்து பாடினார்
திருநாவுக்கரசர். “ஊழிதோ றூழி முற்றும் உயர் பொன்மலை” என்று அதன்
அழியாத் தன்மையை அறிவித்தார் சுந்தரர். இத் தகைய செம்மை சான்ற
கயிலாச மலையின் இயற்கைக் கோலத்தையே தென்னாட்டுத்
திருக்கோயில்கள் சுருக்கிக் காட்டும் என்பர்.
 

திருக்கோணமலை


     இலங்கை யென்னும் ஈழ நாட்டிலுள்ள திருக்கோணமலையும் தேவாரப்
பாமாலை பெற்றதாகும். தெக்கண கயிலாயம் என்று போற்றப்படும்

தென்னாட்டு மலைகளுள் ஒன்று திருக்கோணமலை என்பர்.8 ‘குரை கடல் சூழ்ந்த கோணமாமலை’ என்று தேவாரத்திற் புகழப் பெற்ற அம்மலை

இன்று திருக்கணாமலை என வழங்கும்.9
 

திருக்கற்குடி


     இன்னும், “கற்குடியார் விற்குடியார் கயிலாயத்தார்” என்று தேவாரத்திற்

போற்றப்படும் கற்குடி இக் காலத்தில் உய்யக் கொண்டான் திருமலை என வழங்குகின்றது.10 அம் மலையிற் கோயில் கொண்ட இறைவனை

 

 ‘விழுமியார்’ என்று திருநாவுக்கரசர் போற்றியுள்ளார்.

  
 “கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே”