தேவும் தலமும்183

திருச்செங்கோடு என வழங்கும் ஊரே பழைய செங்குன்றூர் ஆகும்.
 

நெற்குன்றம்

     நெற்குன்றமும், நற்குன்றமும் இறைவன் கோயில் கொண்ட மலைப்
பதிகள் என்று திருஞான சம்பந்தர் கூறியருளினார்.16 நெற்குன்றம் என்னும்
பெயர் வாய்ந்த ஊர்கள் தமிழ் நாட்டிற் பலவாகும். ஆயினும், அவற்றுள்
ஒன்று திருநெற்குன்றம் என்று சாசனத்திற் குறிக்கப்படுவதால் அதனையே
வைப்புத் தலமாகக் கொள்ளலாம். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முசிரி
வட்டத்தில் இப்பொழுது தின்னகோணம் என வழங்கும் ஊரே
திருநெற்குன்றம் எனத் தோன்றுகின்றது.17
 

கந்தமாதனம்

  இன்னும்
 

         “கயிலாய மலையுளார் காரோணத்தார்
         கந்தமா தனத்துளார் காளத்தியார்”

என்று திருவீழி மிழலைப் பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறிய கந்தமாதனம்
என்பது திருச்செந்தூர்க் கோவிலின் வடபால் உள்ளது. கந்தவேள் விடுத்த
தூதுராகிய வீரவாகு தேவர் கந்தமாதனக் குன்றினின்றும் எழுந்து
விண்ணாறாக வீர மகேந்திரத்தை நோக்கிச் சென்றார் என்று கந்த புராணம்
கூறும்.18

 

பொதியமலை

     தமிழ் நாட்டு மலைகளுள் மிகப் பெருமையுடையது பொதிய மாமலை.19
மலையம் என்னும் பொதுப் பெயரைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்ட
பொதிய மலையை இமய