தேவும் தலமும்185

குன்றுடைய பெருமான் குறிக்கப் பெற்றார்.24 நாளடைவில் பழம் பெயர்
மறைந்து குடுமியான் மலை என்ற பெயர் வழங்கலாயிற்று. மலைக்
குடுமியைத் தலைக் குடுமியெனப் பிறழவுணர்ந்த பிற்காலத்தார் சிகாநாதர்
என்று அங்குள்ள ஈசனை அழைக்கலாயினர்.
 

குன்றக்குடி


     பாண்டி நாட்டில் ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர்
குன்றக்குடி என்று பெயர் பெற்றது. அங்கு எழுந்தருளியுள்ள ஈசன்,
திருமலையுடையார் எனவும், தேனாற்று நாயகர் எனவும் சாசனங்களிற்
குறிக்கப்படுகின்றார்.25 தேனாற்று நீர் பாயும் ஊர்களில் குன்றக் குடியும்
ஒன்றாதலால் அங்குள்ள இறைவன் அப்பெயர் பெற்றார் போலும்!
பழங்காலத்துப் பாண்டியர்கள் அக் கோயிலுக்கு விட்ட நிவந்தங்கள்
பலவாகும். இப்பொழுது அவ்வூரின் பெயர் குன்னக்குடியென மருவி
வழங்குகின்றது; அக் குன்றப் பகுதியில் அமர்ந்த குமரவேலை
அருணகிரிநாதர் பாடியுள்ளார்.


                    
அடிக் குறிப்பு

1. ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருஞ் சோதியை’ -என்று
திருவெம்பாவையிற் பாடினார் மாணிக்கவாசகர். திருவெம்பாவை
திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது அம் மலை, அருணாசலம்,
அருணகிரி, சோணாசலம், சோணகிரி, சோணசைலம் என்னும் பெயர்களும்
உடையது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலையிலேயே
பிறந்தவர்.

2. அங்கு ஈசன் கோவிலும், திருமால் கோவிலும் எழுந்தன. அவை முறையே
எதிரிலி சோழேச்சரம் எனவும் எதிரிலி சோழ விண்ணகரம் எனவும் பெயர்
பெற்ற பான்மையைக் கருதும்