பெருங்குளம்
தென்பாண்டி நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்றாகிய குளந்தை
யென்னும் பெருங்குளத்தில்
பழமையான சிவன்
கோயிலும் உண்டென்பது சாசனத்தால் விளங்கும்.
பண்டைப் பாண்டியன்
ஒருவனால் அமைக்கப்பட்ட
அக் கோயில் திருவழுதீச்சுரம் என வழங்கலாயிற்று.12
அடிக் குறிப்பு
1. அங்கிருந்த சோழ மாளிகையில் இராஜராஜனுடன் பிறந்த குந்தவை வசித்து
வந்ததாகச் சாசனம்
கூறும். 350 of 1907.
2. 172 of 1927.
3. அவ்வூரில் எழுந்த அருமொழித் தேவீச்சுரம் என்ற சிவாலயம்
இராஜராஜன் பெயர்தாங்கி
நிலவுகின்றது. 157 of 1908. அப் பெரு வேந்தன்
இறந்த பின்னர் அவன் தேவியாகிய பஞ்சவன்
மாதவி பள்ளிப்படையாக
அங்கு எடுத்த கோவில் பஞ்சவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது.
271
of 1927.
4. இப்போது கோட்டாறு திருக்கொட்டாரம் என வழங்குகின்றது.
5. பஞ்சநதிகள் பாயும் பிரதேசத்தைப் பஞ்சாப் என்றழைப்பார் வடநாட்டார்.
ஐயாறு என்ற
தமிழ்ப் பெயரும் அப் பொருளையே தரும்.
6. இவ்வூர்ப் பெயர் ஆங்கிலத்தில் திருவாதி எனச் சிதைந்து வழங்கும்.
தமிழின் சிறப்பெழுத்தாகிய
வல்லின றகரம் அயல்நாட்டார் நாவில்
சிதைவதற்கு இஃதொரு சான்று.
7. M.E.R. 1934-35.
8. 26 of 1911.
|