திருவெண்துறை
தஞ்சை நாட்டு மன்னார்க்குடிக்கு அணித்தாக உள்ளது திருவெண்துறை.
தேவாரத் பாடல் பெற்ற
அத் தலம் இப்பொழுது
திருவண்டு துறையாகி,
பிருங்கி முனிவர் வண்டு
வடிவத்தில் ஈசனை வழிபட்ட
இடமாகக்
கருதப்படுகின்றது. இன்னும்,
“குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறை யினோடு
மயில் ஆடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றும் துறையனைத்தும் வணங்குவோமே”
என்று பாடினார் நாவரசர்.
குயில் ஆலந்துறை
குயில்கள் இனிதமர்ந்து கூவும் செழுஞ் சோலையினிடையே
ஆலந்துறையைக் “குயிலாலந்துறை” என்று
அவர் குறித்தார். மாயூரம்
என்னும் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லக்
குடியிலே கோயில்
கொண்ட நாதன் பெயர்
ஆலந்துறையப்பர் என்றும், நாயகியின் பெயர்
குயிலாண்ட நாயகி என்றும்
வழங்குதலால், திருநாவுக்கரசர் குறித்த
குயிலாலந்துறை அதுவே எனக் கொள்ளப்படுகின்றது. இந்நல்லக்குடி
ஈசனருள் விளங்கும் இடங்களுள் ஒன்றென்பது, “நற்கொடி மேல்
விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி
நல்லக்குடி”4 என்னும் நாவுக்கரசர்
திருவாக்கால் அறியப்படும்.
திருச்சோற்றுத்
துறை
‘சோழவள நாடு சோறுடைத்து’ என்னும் புகழுரைக்குச் சான்றாக நிற்பது
சோற்றுத்துறையாகும். தேவாரப்
பாமாலை பெற்ற இப் பழந்துறையைப்
“பொன்னித் திரை வலங்கொள் சோற்றுத்துறை” என்று
பாராட்டினார்
சேக்கிழார். பழங் |