“பொன்னியின் நடுவு தன்னுள்
பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே”
என்பது அவர் திருவாக்கு. சாசனங்களில் அவ்வூர் “வீங்கு நீர்த் துருத்தி”
என்று குறிக்கப்படுகின்றது.64 தமிழ் நாட்டிலுள்ள மற்றொரு துருத்தி
திருப்பூந் துருத்தியாகும்.
கூடல்
ஆறுகள் கூடுந் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப்
பண்டைத் தமிழர் கொண்டாடினார்கள்;
அவற்றைக் கூடல் என்று
அழைத்தார்கள்.65 தொண்டை நாட்டில் பாலாறும், சேயாறும், கம்பையாறும்
சேருகின்ற இடத்தில் அமைந்த ஊர்
திருமுக்கூடல் என்று பெயர் பெற்றது.
நெல்லை நாட்டில் தாமிரவருணியும்,
சித்திரா நதியும், கோதண்டராம நதி
என்னும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற
இடம் முக்கூடல்
என முற்காலத்தில்
சிறந்திருக்கிறது. முக்கூடற் பள்ளு
என்னும் சிறந்த நாடகம் அவ்வூரைப்பற்றி
எழுந்ததேயாகும்.66 சோழநாட்டில் கெடில நதியும் உப்பனாறும் கலக்கின்ற
இடத்திற்கு
அருகேயமைந்த
ஊர் கூடலூர் என்று பெயர் பெற்றது.67
தென்னார்க்காட்டில் வெள்ளாறும்,
முத்தாறும்
கூடுகின்ற இடத்தில்
கூடலையாற்றூர் என்ற ஊர்
அமைந்திருக்கின்றது. அது தேவாரப் பாடல்
பெற்றது.
அணை
முற்காலத்தில் தமிழ் மன்னர்கள் ஆற்று நீரை அணைக் கட்டுகளால்
தடுத்துக்
கால்வாய்களின் வழியாக ஏரிகளிலும், |