சாசனத்தால் விளங்குவதாகும். குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன்
முதலிய பெருமன்னரால்
ஆதரிக்கப்பெற்ற அக் கோயிலில் அமர்ந்த
இறைவன் திருநாமம் குற்றம் பொறுத்த நாயனார்
என்று கல்வெட்டிற்
குறிக்கப்பட்டுள்ளது.9
மயிலாடுதுறை
காவிரி யாற்றின் கரையில் சிறந்திலங்கும் சிவப்பதிகளுள் ஒன்று
மயிலாடுதுறை. அத்துறையைக்
கண்டு
ஆனந்தமாகப் பாடினார் திருஞான சம்பந்தர்.
“கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை உந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயில் ஆடுதுறையே”
என்று அவர் பாடிய மயிலாடுதுறை இந் நாளில் மாயவரம் என
வழங்குகின்றது.10
கடம்பந்துறை
‘காவிரிசூழ் கடம்பந்துறை’ யென்று தேவாரத்திற் போற்றப்பட்ட துறை
இக் காலத்தில் குழித்தலையென
வழங்கும் ஊரைச் சார்ந்த கடம்பர் கோவில்
ஆகும்.11 காவிரியாற்றின் தென் கரையிலுள்ள
கடம்பவனத்தில் ஈசன்
காட்சியளித்தமையால்
அப் பெயர் அமைந்ததென்பர்.12 திருக்கோவையாரில்
‘தண் கடம்பைத் தடம்’ என்று சொல்லப்படும் தலம் கடம்பந்துறையாக
இருத்தல் கூடுமென்று தோன்றுகின்றது.
திருஆவடுதுறை
சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப்
பாமாலை பெற்றதோடு திருமந்திரம் |