202ஊரும் பேரும்

படுகின்றது. இவ்விரு துறைகளும் ஒரு பெயருடையன வாயிருத்தலின்,

இவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு முன்னதை வடகரை மாந்துறை என்றார் திருத்தொண்டர் புராணமுடையார். காவிரி யாற்றின் வட கரையில்

அமைந்த மாந்துறையை,
   

                    “அம்பொனேர் வருகாவிரி வடகரை மாந்துறை”

என்று பாடினார் திருஞான சம்பந்தர்.14

     இனி, வைப்புத் தலமாகிய திருமாந்துறை, கும்பகோண வட்டத்தில்
திருமங்கலக் குடிக்கு அணித்தாக உள்ளது. அத்தலத்தையும் திருஞான
சம்பந்தர் பாடினார் என்பது சேக்கிழார் வாக்கால் புலனாகின்றது.

      
“கஞ்சனூர் ஆண்டதம் கோவைக்
       கண்ணுற் றிறைஞ்சி முன்போந்து
       மஞ்சணி மாமதில் சூழும்
       மாந்துறை வந்து வணங்கி
       அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி”

என்னும் பாட்டால், திருமாந்துறை இறைவற்குத் திருஞான சம்பந்தர்
தமிழ்மாலை சாத்தினார் என்று தெரிகின்றது எனினும், அப் பாடல்
கிடைக்கவில்லை.
 

திருச்செந்துறை

     ஆலந்துறையை வணங்கிய பின்னர்த் திருஞான சம்பந்தர்
திருச்செந்துறை முதலாய பல கோவில்களையும் வழிபட்டுக் கற்குடிமலையை
அடைந்தார் என்று சேக்கிழார் கூறுதலால், இறைவன் கோயில்
கொண்டுள்ள இடங்களில் திருச் செந்துறையும் ஒன்றென்று தெரிகின்றது.
திருச்சி நாட்டிலே