தேவும் தலமும்209

தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும்
திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால்
அறியப்படுகின்றது.30

                 அடிக் குறிப்பு

1. பராய் என்பது Paper tree என்று ஆங்கிலத்தில் வழங்கப்பெறும்.

2. திருஞான சம்பந்தர் புரராணம், 347.

3. இராகவய்யங்கார் ஆராய்ச்சித் தொகுதி, ப. 287.

4. நல்லக்குடி யென்பது இந் நாளில் நல்லத்துக்குடி என மருவி
வழங்குகின்றது.

5.    
“இம்மையே தரும் சோறும் கூறையும்
       ஏத்தலாம் இடர் களையலாம்
       அம்மையே சிவலோக மாள்வதற்கு
       யாதும் ஐயுற வில்லையே”
- என்ற சுந்தரர் தேவாரத்தில் சோறு

என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.

6. M.E.R.,1931-32.

7. புதுக்கோட்டை நாட்டில் பெருந்துறை என்னும் பெயருடைய ஊர்
ஒன்றுண்டு. அங்குள்ள பழுதுற்ற சிவாலயத்திற் கண்ட சாசனங்களால்
அவ்வூர் பழைய கான நாட்டைச் சேர்ந்த தென்பது புலனாகின்றது.
பெருந்துறை என்ற பெயர் ஆதியில் அத்திருக் கோயிலுக்கு அமைந்து, பிறகு
ஊரின் பெயரா யிருத்தல் கூடும். 404 of 1906.

8. இத் தலத்தை வணங்கிய வாலி, அரக்கர் வேந்தனாகிய இராவணனை
வென்றுயர்ந்த கிஷ்கிந்தை யரசனே என்பது,

    
“நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தோடொல்க
      வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்”

என்னும் திருஞான சம்பந்தர் வாக்கால் தெளிவாகும்.
                          -வடகுரங்காடு துறைப்பதிகம்.