தமிழகமும் நிலமும்21

குளங்களிலும் நிரப்பினார்கள். இவ் விதம் பாசனத்திற்குப் பயன்பட்ட
அணைகளின் அருகே சில ஊர்கள் அணைகளின் அருகே சில ஊர்கள்
எழுந்தன. தென்னார்க்காட்டில கரடியணை  என்பது ஓர் ஊரின் பெயர்.
கண்ணணை இராமநாதபுரத்திலும், வெள்ளியணை திருச்சிராப்பள்ளியிலும்
காணப்படுகின்றன.

கால்

     அணைகளைப் போலவே கால்வாய்களின் அருகே எழுந்த ஊர்களும்
உண்டு. நெல்லை நாட்டில் வெள்ளக் கால், பள்ளக்கால் முதலிய ஊர்கள்
உள்ளன. தலைக்கால் என்னும் ஊர் இராமநாதபுரத்தில் காணப்படுகின்றது.
இன்னும், மணற்கால்  திருச்சிராப்பள்ளியிலும், குவளைக்கால் தஞ்சை
நாட்டிலும், மாங்கால் வட ஆர்க்காட்டிலும் விளங்குகின்றன. கால்வாய்
என்னும் சொல்லே நெல்லை நாட்டின் ஓர் ஊரின் பேராக வழங்குகின்றது.

ஓடை

    இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடை
என்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும், பாலோடை
இராமநாதபுரத்திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.
 

மடை


    கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடையென்று
பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணீர் வயல்களிற் சென்று பாயும்.
இத் தகைய மடைகள்