மாடமும் மயானமும்
மாடம் என்னும் பெயர் அமைந்த இரண்டு திருக்கோயில்கள் தேவாரத்திற்
குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கடந்தையென்னும் பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்,
“கடந்தைத் தடங் கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்கனே”
என்று தேவாரம் அம் மாடத்தைப் போற்றுகின்றது. இன்னும், ஆக்கூரில் உள்ள சுயம்பு வடிவான
ஈசன் திருக்கோவில் தான் தோன்றி மாடம் என்னும் பெயர் பெற்றது. முன்னாளில் அறத்தால்
மேம்பட்டிருந்த ஊர்களில் ஆக்கூரும் ஒன்றென்பர். அங்குச் சிறப்புற்று வாழ்ந்த
வேளாளரின் வள்ளன்மையைத் தேவாரத் திருப்பாட்டில் அமைத்துப் புகழ்ந்தார் திருஞானசம்பந்தர்.
“வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”
என்பது அவர் வாக்கு. அங்குள்ள மாடக் கோயிலில், இயற்கை யுருவாக ஈசன் விளங்குதலால், தான்
தோன்றி மாடம் என்பது திருக்கோயிலின் பெயராயிற்று.1
நாலூர்-மயானம்
மயானம் என்னும் சுடுகாடும் ஈசனது கோயிலாகும். “கோயில் சுடுகாடு,
கொல்புலித்தோல் நல்லாடை” என்று பாடினார் மாணிக்கவாசகர். “காடுடைய சுடலைப் பொடி
|