தேவாரம் கூறும்.2 அக்கோயிற் பெயர் சாசனங்களிலும் வழங்குகின்றது.3 இந்
நாளில் அவ்வூர்ப்
பெயர் கருவேலி என மருவியுள்ளது.
குருகாவூர்-வெள்ளடை
சோழ நாட்டில் சோலையும் வயலும் சூழ்ந்த குருகாவூரில் ஈசன்
கோயில் கொண்ட இடம்
வெள்ளடை
என்று பெயர் பெற்றது.4
“வளங்கனி பொழில்மல்கு
வயலணிந் தழகாய்
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை”
என்று பாடினார் சுந்தரர்.
திருஆனைக்கா-வெண்நாவல்
திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள திருஆனைக்கா என்னும்
சிவஸ்தலம் பண்டைச் சோழ மன்னரால்
பெரிதும் கொண்டாடப்பட்ட
தென்பர். ஈசனார்க்குப் பல மாடக் கோயில் கட்டி
மகிழ்ந்த
கோச்செங்கட்
சோழன் சிவனருள் பெற்ற
இடம் திரு ஆனைக்காவே யாகும்.5
காவிரிக்கரையில் அமைந்த ஆனைக்காவில் இறைவன் வெண்ணாவல்
மரத்தில் விளங்கிய தன்மையையும், சோழ மன்னனுக்கு
அருள் புரிந்த
செம்மையையும் திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
“செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையாய்எம் வெணாவலுளாய் |