“தெரிய வரிய தேவர் செல்வம்
திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் கால காலர்
காரோணத் தாரே”
என்று அத் திருக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது.
கும்பகோணம் மகாமகக்
குளத்தின் வடகரையில்
காசி விசுவநாதர் கோயில்
என்னும் பெயர் கொண்டு விளங்கும் ஆலயமே பழைய காரோணம் என்பர்.
காஞ்சி-காரோணம்
காஞ்சி மாநகரில் அமைந்த திருக்கோயில்களுள் ஒன்று காயாரோகணம்.
அயனும் மாலும் அந்தம்
வந்துற்றபோது
அங்குள்ள ஈசனிடம் ஒடுங்குதலால்
காயாரோகணப்
பெயர் அதற்கு அமைந்ததென்று காஞ்சிப் புராணம்
கூறும்.6 “காஞ்சிக்கு உயிரெனச் சிறந்த உத்தமத் திருக்காரோணம்” என்று
புராணம் கூறுமாற்றால் அதன் பெருமை இனிது விளங்குவதாகும்.
அடிக் குறிப்பு
1. “கண்ணுளார் கருவூருள் ஆனிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே”
திருஞான சம்பந்தர், தேவாரம்.
2. “கங்கைசேர் சடையான்தன் கருவிலிக்
கொங்கு வார்பொழில் கொட்டிட்டை சேர்மினே”
எனப் பணித்தார் திருநாவுக்கரசர்.
3. 224 of 1923.
4. வெள்ளடை யென்பது வெள்விடையின் திரிபென்று கொள்வாரும் உளர். |