இளங்கோயில்
இன்னும், இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைத்
தொகுத்துரைக்க விரும்பிய திருநாவுக்கரசர்.
“இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் வீழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே”
என்று பாடிப் போந்தார். இப்பாசுரத்திற் குறிக்கப்பெற்ற கோயில்களைத்
தேவாரத்தாலும்
சாசனங்களாலும் ஒருவாறு அறியலாகும்.
மேலே குறித்த கடம்பூரில் ஈசனார்க்குத் திருக்கரக் கோயிலோடு
இளங்கோயில் என்னும் மற்றோர்
ஆலயமும் இருந்ததாகத் தெரிகின்றது.
“கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளும்
கயிலாய நாதனையே காண லாமே”
என்றார் திருநாவுக்கரசர். கடம்பூரில் திருக்கரக் கோயிலுக்குக் கிழக்கே ஒரு
மைல் தூரத்தில்
இளங்கோயில் அமைந்துள்ள தென்பர்.8
தஞ்சை நாட்டுப் பேரளத்திற்கு அருகே மற்றோர் இளங்கோயில்
உண்டு.
“நெஞ்சம் வாழி நினைந்திடு மீயச்சூர்
எந்தமை உடையார் இளங்கோயிலே”
என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் இவ் விளங்கோயில் திருமீயச்சூரைச்
சேர்ந்ததென்பது
விளங்கும்.
சித்தூர் நாட்டில் இக் காலத்தில் திருச்சானூர் என வழங்கும் ஊரில்
ஈசனார் அமர்ந்தருளும்
இடம்
|