பூரத்துக்கோயில்
“உரத்தூர்க் கூற்றத்துக் கடுவங்குடிப் பற்றிலுள்ள பூலத்தூர்” என்று
சாசனம்
கூறும்.18 பூலத்தூரில்
முத்தீச்சுரம் என்னும்
சிவாலயம் எழுந்தது.
மாறவர்மன் முதலிய
பாண்டி மன்னருள் பிறரும் அக்
கோயிலுக்கு
நிவந்தங்கள் அளித்துள்ளார்கள். நாளடைவில் முத்தீச்சுரம் பூலத்தூர்க்
கோயில் என்றே வழங்கலாயிற்று. அப்பெயர் பூரத்துக் கோயிலெனத் திரிந்து
ஊரின் பெயராயிற்று.
சிவபெருமான் வீற்றிருந்தருளும் வாயிற்பதிகளை வகுத்துரைக்கப்
போந்த திருநாவுக்கரசர்,
“கடுவாயர் தமைநீக்கி என்னை யாட்கொள்
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்
நடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்”
என்று பாடிச் செல்கின்றார்.
இத் திருப்பாசுரத்திற் குறிக்கப்பெற்ற அண்ணல் வாயில் இப்பொழுது
சித்தன்ன வாசல் என்னும்
பெயரோடு புதுக்கோட்டை நாட்டில் உள்ளது.
“மலர்ந்ததார்வாள் மாறன் மன் அண்ணல்
வாயில்” என்னும் பழம்
பாட்டாலும் அப்பதியின் பெருமை அறியப்படும்.19 அண்ணல்
வாயிலில்
அமைந்த குகைக் கோயில் மிகப் பழமை வாய்ந்தது; சிற்ப வேலைப்பாடு
உடையது.
பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் காலத்தில் வண்ண
ஓவியங்கள் அக் கோயிலில் உண்டு.20 |