நெடுவாயில்
நெடு வாயில் என்னும் பெயருடைய பதிகள் தமிழ் நாட்டிற் பலவாகும்.
எனினும், அவற்றுள் சாலப்
பழமை வாய்ந்ததும்,
சிவாலயச் சிறப்புடையதும்
ஆகிய ஊர் தஞ்சை
நாட்டில் பட்டுக்கோட்டை
வட்டத்திலுள்ள நெடு
வாசலே என்று சாசனம் கூறும்.21 அச் சிவாலயம் பழுதுற்றிருப்பதாகத்
தெரிகின்றது.
நெய்தல்
வாயில்
காவிரிப்பூம்பட்டினத்தின் அருகேயுள்ள நெய்தல் வாயில் இக்காலத்தில்
நெய் வாசல் என
வழங்கும். திருவெண்காட்டுக்கும்,
பட்டினத்துப்
பல்லவனீச்சுரத்திற்கும் இடையே உள்ளது அப்பழம்பதி.
திருமுல்லைவாயில்
காவிரி யாற்றின் வட கரையில் கடலருகே யுள்ளது
திருமுல்லைவாயில்.22 அது திருஞான சம்பந்தரால்
பாடப் பெற்றது.
“வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேறல் ஆடு
திருமுல்லை வாயில் இதுவே”
என்னும் திருப் பாட்டில் கடற்கரையி லமைந்த முல்லை வாயிலின் கோலம்
நன்கு
விளங்குகின்றது. அங்குக் கோயில்
கொண்டுள்ள ஈசன் முல்லைவன
நாதர் என்று
அழைக்கப் பெறுகின்றார்.
ஞாழல் வாயில் என்பதும், முன்னே சொல்லிய ஞாழற் கோயில்
என்பதும் ஒன்றெனத் தோன்றுகின்றன.23 |