240ஊரும் பேரும்

          “கற்குன்றும் தூறும் கடுவெளியும்
          கடற்கானல் வாய்ப்
          புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்
          புன வாயிலே”
என்னும் சுந்தரர் தேவாரம் நன்குணர்த்துவதாகும். தஞ்சை நாட்டு அறத்தாங்கி வட்டத்தில் திருப்புன வாசல் என்ற பெயரோடு விளங்குகின்றது அப்பதி.
 

குடவாயில்


    தஞ்சை நாட்டில் குடவாசல் என விளங்கும் ஊரே குடவாயில் என்னும்
பழம்பதி யாகும். முற்காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு பெரு நகரின் மேல
வாசலாக அமைந்த இடம் பிற்காலத்தில் ஓர் ஊராயிற் றென்று
தோன்றுகின்றது.
 

அங்கிருந்த பழைய கோட்டை மதில்கள் தேவாரத்திலும் குறிக்கப்படுகின்றன.

     
“வரையார் மதில்சூழ் குடவாயில் மன்னும்
      வரையார் பெருங்கோயில் மகிழ்ந்தவனே”

என்பது திருஞான சம்பந்தர் பாட்டு. கோட்டையூராகிய குடவாசலில் ஈசன்
விளங்குமிடம் பெருங்கோயில் என்று போற்றப்பட்டுள்ளது.
 

  குணவாயில்


   குணவாயில் என்னும் பெயடைய ஊர்கள் பலவுண்டு.24 சேர நாட்டின்
தலை நகரமாகச் சிறந்திருந்த வஞ்சியின் அருகே ஒரு குணவாயில்
இருந்ததென்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகின்றது. அந்நூலுக்கு உரை கண்ட
ஆசிரியர் இருவரும் குண வாயிலைத் திருக்குணவாயில் என்று குறிப்பிடும்
பான்மையைக் கருதும்பொழுது அது