தேவும் தலமும்241

தெய்வ நலம் பெற்ற ஊரென்று தோன்றுகின்றது. திருக்குணவாயில் என்பது
ஓர் ஊர் என்றும், அது வஞ்சியின் கீழ்த்திசைக்கண் உள்ள தென்றும், உரை
ஆசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
 

திருவிடை வாயில்


    இன்னும், சில வாயிற் பதிகளின் பெருமை சாசனங்களால் விளங்கும்.
நன்னில வட்டத்தில் உள்ள திருவிடை வாய்க்குடி நெடுங்காலமாக வைப்புத்
தலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணப்பட்டது. அத் தலத்தைப் பற்றிய
குறிப்பு, திருத்தொண்டர் புராணத்திலும் காணப்படவில்லை. எனினும்,
திருவிடைவாய் என்னும் தலம் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதென்பது
கல்வெட்டால் விளங்கிற்று.25 தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் இப்போது
திருவிடை வாசல் என வழங்கும் ஊரே இத்தலம் என்பது தெளிவாயிற்று.
“மறியார் கரத்தெந்தை” என்றெடுத்து, “மாறில் பெருஞ் செல்வம் மலி
விடைவாயை, நாறும் பொழில் காழியர் ஞான சம்பந்தன் கூறும் தமிழ் வல்லவர் குற்றமற்றோரே” என்று அழகுற முடித்த திருப்பதிகம் வடிவாகக் கல்வெட்டிலே காணப்படுகின்றது.26
 

திருவேங்கை வாயில்

    திருவேங்கை வாசல் என்னும் ஊர் புதுக்கோட்டை நாட்டில் உள்ளது.
திரு மேற்றளி என்பது அங்குள்ள கோயிலின் பெயராகும். பெருவாயில்
நாட்டுத் தேவதானமாகிய திருவேங்கை வாயிலிற் கோயில் கொண்ட
திருமேற்றளி மகாதேவர்