என்று பாடினார் சுந்தரர். இவ்வூர் புஞ்சை என்னும் பெயரோடு தஞ்சை
நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.9
பரன்சேர்பள்ளி
கோவை நாட்டுத் தாராபுர வட்டத்தில் பரன்சேர் பள்ளியென்னும்
திருக்கோயில் உண்டென்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. அக் கோயில்
நட்டூர் என்ற ஊரில் இருந்தமையால் மத்திய
புரீஸ்வரர் என்னும் பெயர்
அங்குக்கோயில் கொண்ட ஈசனுக்கு அமைந்தது.
‘காங்கய நாட்டுப் பரன்சேர்
பள்ளியிலுள்ள நட்டூர் அமர்ந்தார்’ என்பது
சாசன வாசகம்.10 இப் பெயர்
பரஞ்சேர்வலி யென மருவியுள்ளது.
திருநாவுக்கரசர் குறித்தருளிய பரப்பள்ளி
இப் பதியாயிருத்தல் கூடும் எனத்தோன்றுகின்றது.
அறைப்பள்ளி
“கொல்லிக் குளிர் அறைப்பள்ளி”யும் இறைவன் உறையும் பள்ளிகளுள்
ஒன்றென்று அருளிப் போந்தார் திருநாவுக்கரசர். கொல்லி மலை கொங்கு
நாட்டைச் சேர்ந்ததாகும்.11 அம் மலையில்
அமைந்த அறைப் பள்ளியைச்
சாசனம்
குறிக்கின்றது. சேலம் நாட்டு நாமக்கல்
வட்டத்திலுள்ள வளப்பூர்
நாடு என்ற ஊரிற் கண்ட சாசனத்தால் அப்பள்ளியின் தன்மையை
அறியலாகும்.12 கொல்லிப் பாவை என்று
குறுந்தொகை முதலிய பழந்தமிழ்
நூல்களிற் கூறப்படும் தெய்வப் பாவை
அறைப்பள்ளிக்கு மேற்றிசையில்
உள்ள தென்பர்.13 |