258ஊரும் பேரும்

நாகளேச்சுரம்
 

   தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் குழிக்கரை என்னும் ஊரில் பழைய
சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு நங்காளீச்சுரம் என்று சாசனம்
கூறும்.5 திருநாவுக்கரசர் குறித்த நாகளேச்சுரம் இத்திருக்கோயிலாயிருக்கலாம்
என்று தோன்றுகின்றது.

கோடீச்சுரம்

      தஞ்சை நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே காவிரியாற்றின்
வடபால் கோடீச்சுரம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தேவாரத்தில்,
 
           
“கொடியொடு நெடுமாடக் கொட்டை யூரில்
            கோடீச் சுரத்துறையும் கோமான் தானே”6

என்று போற்றும் பெருமை சான்றது இப் பதியேயாகும். கொடியாடும்
மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் கோடீச்சுரம் என்னும் திருக்கோயிலில்
இறைவன் வீற்றிருக்கும் பான்மை இப் பாசுரத்தால் இனிது விளங்கும்
கொட்டைச் செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் கொட்டையூர் என்னும்
பெயர் அவ்வூருக்கு அமைந்ததென்பர். அத் தலத்திற் கோயில் கொண்ட
பெருமானது திருமேனி பல சிவலிங்கங்களால் அமைந்த தென்பதும், அவரை
வழிபட்டார் கோடி லிங்கங்களை வணங்கிய பயனைப் பெறுவர் என்பதும்
புராணக் கொள்கை.

 

கொண்டீச்சுரம்

   நன்னிலத்துக் கருகேயுள்ளது கொண்டீச்சுரம் என்னும் சிவாலயம். இது
திருநாவுக்கரசரால் பாடப்பெற்றது; திருக்கண்டீஸ்வரம் என இப்பொழுது
வழங்குகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப்பெயரும்ஆயிற்று.