திண்டீச்சுரம்
ஈசனார் கோயில் கொண்ட திண்டீச்சுரம் என்னும் திருக்கோயில்
ஓய்மானாட்டுக் கிடங்கிற்
பதியில் அமைந்திருந்ததாகச் சாசனங்கள் கூறும்.7
முன்னாளில் சிறப்புற்று விளங்கிய கிடங்கில்
என்னும் ஊர் இப்பொழுது
திண்டிவனத்தின் உட்கிடையாக ஒடுங்கியிருக்கின்றது.
எனவே, திண்டீச்சுரம்
என்று தேவாரத்தில்
குறிக்கப்பட்ட தலம் திண்டிவனத்தின் கண்ணுள்ள
சிவன் கோயிலேயாகும்.
இக்கோயில் இராஜராஜன் முதலாய சிறந்த சோழ
மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட தென்பது கல்வெட்டுகளால்
அறியப்படுவது.
திண்டீச்சுரத்தில் தினந்தோறும் இன்னிசை நிகழ்தல் வேண்டும் என்று
எண்ணிய
இராஜாஜன், வீணை வாசிக்க வல்லார் ஒருவருக்கும்,
வாய்ப்பாட்டில் வல்லார் ஒருவருக்கும்
நன்கொடையாக நிலங்கள் வழங்கிய
சாசனம் அக்கோயிலின் தெற்குச் சுவரில் காணப்படும்.8
கோழீச்சுரம்
இந் நாளில் சிற்றூர் (சித்தூர்) நாட்டைச் சேர்ந்துள்ள புங்கனூர் பெருஞ்
சோழ மன்னரது
ஆதரவு பெற்ற ஊராக விளங்கிற்று. அவ்வூர்க் கோயிலிற்
கண்ட சாசனங்களால் அது பெரும் பாணப் பாடிப்
புலிநாட்டில்
உள்ளதென்பதும், திருக்கோழீச்சுரம்
என்பது சிவாலயத்தின் பெயர் என்பதும்
விளங்குகின்றன.9 கங்கை கொண்டான் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற
பெருஞ் சோழன் அவ்வூரில்
கட்டிய ஏரி, ‘இராசேந்திர சோழப் பெரியேரி’
என்று வழங்கிற்று. இங்ஙனம் பாண குல மன்னராலும்,
சோழ குலப் பெரு
வேந்தராலும் ஆதரிக்கப்பெற்ற |