260ஊரும் பேரும்

கோழீச்சுரம் திருநாவுக்கரசர் தேவாரத்திற் குறித்த குக்குடேச்சுரமாயிருத்தல்
கூடும்.

அக்கீச்சுரம்

     தஞ்சை நாட்டில் காவிரியின் வட கரையில் உள்ள கஞ்சனூர்
திருநாவுக்கரசரது பாமாலை பெற்ற பதியாகும். அங்கித் தேவன் அங்கு
ஈசனை வழிபட்டான் என்னும் ஐதீகம், “அனலோன் போற்றும் காவலனை

கஞ்சனூர் ஆண்ட கோவை” என்னும் தேவாரத்தால் அறியப்படும்.

அக்காரணத்தால் கஞ்சனூர்ச் சிவாலயம் அச்கீச்சுரம் என்று பெயர்

பெற்றது. இப்பொழுது அக்கினீசுரர் கோயில் என வழங்கும் திருக்கோயிலிற்

பொறிக்கப்பட்டுள்ள சாசனம் திருவக்கீச்சுரம் என்று அதனைக் குறிக்கின்றது.

எனவே, திருநாவுக்கரசர் கூறியருளிய அக்கீச்சுரம் கஞ்சனூரிலுள்ள ஆலயம்

என்று கொள்ளலாகும்.


இன்னும், ஈசனார்க் குரிய கோயில்களைக் கூறும் அத் திருப் பாசுரத்தில்,

       
“ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
        அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண்கானல்
        ஈடுதிரை இராமேச்சுரம் என்றென் றேத்தி
        இறைவன்உறை சுரம்பலவும் இயம்பு வோமே”

என்று அருளிப் போந்தார் திருநாவுக்கரசர். இவ்வீச் சுரங்களை முறையாகக்
காண்போம்:
 

ஆடகேச்சுரம்

      திருவாரூரில் உள்ள திரு மூலட்டானம் என்னும் பூங் கோயிலின்
உட்கோயிலாக ஆடகேச்சுரம் அமைந்துள்ளது. புற்றிடங் கொண்டார்
கோயிலுக்குத் தென்கிழக்கே நாகபிலம் என்று சொல்லப்படும் ஆலயமே
ஆட