தேவும் தலமும்265

என்பது அவர் திருப் பாசுரம். இப்பொழுது முக்கீச்சுரம்
திருச்சிராப்பள்ளியின் ஒரு சார் அமைந்த உறையூரிற் காணப்படுகின்றது.
 

கபாலீச்சுரம்


   சென்னையைச் சார்ந்த மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற பழங்

கோயில் கபாலீச்சுரம் என்னும் பேருடையதாகும். இக் கோயிலின் முன்னே
நின்று பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் தருமாறு சம்பந்தர் பாடிய
திருப்பதிகத்தில், “கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம்” என்றும், “கண்ணார்
மயிலைக் கபாலீச்சுரம்” என்றும் அத்திருக் கோவிலைப் போற்றியருளினார்.
 

கணபதீச்சுரம்

   செயற் கரிய செயல் செய்து சிவனருள் பெற்ற சிறுத்தொண்டருடைய
ஊர் திருச் செங்காட்டங் குடியாகும். அங்குள்ள திருக்கோயிலின் பெயர்
கணபதீச்சுரம். விநாயகப்பெருமான் ஈசனை அங்கு வழிபட்டமையால் ்
அப்பெயர ஆலயத்துக்கு அமைந்த தென்று கந்த புராணம் கூறும்.17

   செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டர்க்கு அருள் செய்யும்
பொருட்டாகக் ‘கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே’ என்று
திருஞான சம்பந்தர் மனமுருகிப் பாடியுள்ளார்.
 

சோமீச்சுரம்


    கும்பகோணம் என வழங்கும் குடமூக்குப் பல்லாற்றானும் பெருமை
சான்றது.

          
“குடமூக்கே என்பீ ராகில்
           கொடுவினைகள் தீர்ந்து அரனைக் கூடலாமே”

என்பது தேவாரம். இத் தகைய பழம் பதியில் பாடல் பெற்ற சிவாலயம்
இரண்டு உண்டு; ஒன்று, குடந்தைக்