காரோணம்; மற்றொன்று, குடந்தைக் கீழ்க்கோட்டம், இந்நாளில், முன்னது
கும்பேசுரர்
கோயில் எனவும், பின்னது நாகேஸ்வரர் கோயில் எனவும்
வழங்கும். நாகேஸ்வரர் கோயில்
என்னும் கீழ்க்
கோட்டத்தில் சூரியன்
வழிபட்டதாகச்
சொல்லப்படுகின்றது. மூலத்தானத்து
மூர்த்தியின் மீது
இன்றும் சில நாட்களில் சூரியன் கதிர்கள் வீழ்வது அதற்குச்
சான்றாகும்
என்பர். சூரியன் வழிபட்டவாறே சந்திரனும் குடமூக்கில் ஈசனிடம் வரங்
கிடந்தான்.
அவன் பேறு பெற்ற ஆலயம் சோமீச்சுரம் எனப்பட்டது.
இப்பொழுது அது சோமநாதர் கோயில்
என வழங்கும்.18
தேவீச்சுரம்
தேவீச்சுரம் என்னும் திருக்கோயில் தென்னாட்டில் உள்ளதென்பது
“திரிபுராந்தகம் தென்னார்
தேவீச்சுரம்” என்ற திரு வாக்கால் விளங்கும்.
தென்னாடாகிய நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரிக்கு
அணித்தாகத் தேவி
ஈசனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம் ஒன்றுண்டு.
தேவீஸ்வரர் என்பது
அங்குள்ள
ஈசன் திரு நாமமாக
இன்றும் வழங்கி வருகின்றது. அழகிய நாயகி
என்று
பெயர் பெற்றுள்ள
வடிவுடையம்மையின் பெருமையால் முன்னாளில்
தேவீச்சுரம் என்று அழைக்கப்பெற்ற திருக்கோயில்
இந்நாளில் வடிவீச்சுரம்
என வழங்குகின்ற தென்பர். கோயிற் பெயர் ஊர்ப் பெயராயிற்று. |