ஓர் அழகிய கானலஞ் சோலை என்பது விளங்கும். அச்சோலையில் நின்ற
கோவில் கேதீச்சுரம்
என்று குறிக்கப்படுகின்றது.
“மாவும் பூகமும் கதலியும் நெருங்குமா
தோட்ட நன்னகர் மன்னித்
தேவி தன்னொடும் திருந்துகே தீச்சரத்
திருந்த எம்பெரு மானே”
என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. இராஜராஜ சோழன் ஈழ
மண்டலத்தை வென்று அதற்கு
மும்முடிச் சோழமண்டலம் என்று
பெயரிட்டபொழுது, மாதோட்டம் என்னும் ஊர் இராசராசபுரம்
என்றும்,
திருக்கேதீச்சரம் இராசராசேச்சரம் என்றும் பெயர் பெற்றது.21
தாடகேச்சுரம்
திருப்பனந்தாள் என்னும் பதியிலுள்ள சிவாலயம் தாடகேச்சுரம்
ஆகும். “தண்பொழி சூழ் பனந்தாள்
திருத் தாடகை யீச்சரமே” என்று
தேவாரம் அதனைப் போற்றுகின்றது. தாடகை
யென்னும் மாது செய்த
பூசைக்கிரங்கி ஈசன்
தண்ணளி புரிந்தமையால் அத்திருக்கோயில்
தாடகேச்சுரம் என்னும் பெயர்
பெற்ற தென்று புராணம் கூறும்.22
வர்த்தமானீச்சுரம்
சோழநாட்டுச் சிறந்த பதிகளுள் ஒன்றாகிய திருப்புகலூர் மூவர்
தேவாரமும் பெற்றதோடு, திருநாவுக்கரசர்
முத்தியடைந்த சீர்மையும்
தண்ணளி புரிந்தமையால் அத்திருக்கோயில்
உட்கோயிலாக
விளங்குவது
வர்த்த மானீச்சரம்.
முருகன் என்னும் சிவனடியார் நித்தலும்
அன்போடு
பூமாலை
சாத்தி வர்த்தமானீச்சரப் பெருமானை வழிபட்ட செய்தி
தேவாரத்தால் அறியப்படுவதாகும். |