தமிழகமும் நிலமும்27

என்னும் பெயர் பெற்றார் என்று குரு பரம்பரை கூறும்.83 இன்னும்,
பொய்கை என்ற பெயருடைய ஊர் ஒன்று வட ஆர்க்காட்டில் உள்ளது.
எனவே, குளத்தைக் குறிக்கும் பொய்கை என்னும் சொல்லும் ஊர்ப் பெயராக
வழங்குதல் உண்டென்பது விளங்கும்.

 
ஊருணி
 

    உண்பதற் குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார்
உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு
அமைந்ததென்பர்.84 ஊருணியின் பெயரால் வழங்கப்பெறும் ஊர்கள் தமிழ்
நாட்டில் உண்டு. பேரூரணி என்ற ஊர் நெல்லை நாட்டிலுள்ளது. மயிலூரணி
இராமநாதபுரத்திலும், புரசூரணி தஞ்சை நாட்டிலும் காணப்படும்.

செறு

    செறு என்பது குளத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். சித்தூர்
நாட்டில் ராயலு செறுவு என்ற சிற்றூர் உள்ளது. விஜய நகரப் பெரு
மன்னராய் விளங்கிய கிருஷ்ண தேவராயர் அங்குப் பெரியதோர் ஏரி

கட்டி,வேளாண்மையைப் பேணிய காரணத்தால் ராயர் செறு  என்னும் பெயர்
அதற்கு அமைந்ததென்று சொல்லப்படுகின்றது.85 முன்னாளில் அவ்வூர்
காஞ்சியிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் பெருஞ்சாலையை

அடுத்திருந்தமையால் சாலச் சிறப்புற்றிருந்தது. அங்கு விஜய நகர மன்னர்
கட்டிய ஏரி இன்றும் காணப்படுகின்றது. அரை