மயிண்டீச்சுரம்
திருஞான சம்பந்தர் தேவாரத்தில் மயிண்டீச்சுரம் எனக் குறிக்கப்பெற்ற
தலம் சேலம் நாட்டுத்
தருமபுரி வட்டத்திலுள்ள
அதமன் கோட்டைச்
சிவாலயமாகும். அங்குள்ள
சோமேசுரர் கோயிற்
சாசனத்தில்
மயிந்தீசுரமுடையார்
என்று அவ்விறைவன் குறிக்கப்படுதலால் இவ்வுண்மை
விளங்குகின்றது.29
கார்க்கோடீச்சுரம்
காமரச வல்லி என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான சிவாலயம்
கார்க்கோடீச்சுரம் என்று பெயர்
பெற்றிருந்தது. ஆதியில் அவ்வூர் திரு
நல்லூர் என வழங்கிற் றென்பது கல்வெட்டால் அறியப்படும்.
பிற் காலத்தில்
அது காமரவல்லி சதுர்வேதி மங்கலம் என்னும்
பெயரை எய்திற்று. “விறைக்
கூற்றத்துப் பிரம
தேயமாகிய காமரவல்லி சதுர்வேதி மங்கலத்தில்
திருநல்லூரிலுள்ள
கார்க் கோடீச்சுரம்” என்பது சாசனம்.30 நாளடைவில்
நல்லூர்
என்னும் பெயர் மறைந்து காமரவல்லி
என்பதே ஊரின் பெயர்
ஆயிற்று.
பாடல் பெற்ற திருப்பழு வூருக்குப் பன்னிரண்டு மைல் தூரத்தில்
இப்போதுகாமரசவல்லியாக விளங்குவது இவ்வூர்.
அடிக் குறிப்பு
1. “பகவனே ஈசன், மாயோன், பங்கயன், சினனே புத்தன்”- சூடாமணி
நிகண்டு.
2. 180 of 1911.
3. அம்பர் மாகாளம் தஞ்சை நாட்டு நன்னில வட்டத்திலும், இரும்பை
மாகாளம் தென்னார்க்காட்டுத்
திண்டிவன வட்டத்திலும் உள்ளன. |