274ஊரும் பேரும்

                   அரசரும் ஈச்சுரமும்

     தமிழ் அரசர் பலர் தம் பெயரை ஆலயங்களோடு இணைத்து
அழியாப் பதம் பெற ஆசைப்பட்டார்கள். அன்னார் எடுத்த திருக்
கோயில்கள் பெரும்பாலும் ஈச்சுரம் என்று பெயர் பெற்றன; தேவார
காலத்திற்கு முன்னரே இப்பழக்கம் எழுந்ததாகத் தெரிகின்றது. எனினும்,
பிற்காலத்தில் எழுந்த ஈச்சுரங்கள் மிகப் பலவாகும்.

பல்லவனீச்சுரம்

     பல்லவ குல மன்னர் சிவாலயங்கள் பல கட்டினர். சோழ நாட்டின்
துறைமுக நகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பல்லவனீச்சுரம் என்னும்
திருக்கோயில் விளங்கிற்று. அதனைத் திருஞான சம்பந்தர் விளங்கிற்று.
அதனைத் திருஞான சம்பந்தர் பாடியருளினார். பல்லவ மன்னன் ஒருவனால்
அக் கோயில் எடுக்கப்பட்ட தென்பது வெளிப்படை.

குணதரவீச்சுரம்
 

     குணதரன் என்னும் விருதுப் பெயர் கொண்ட மகேந்திரவர்மன்
திருநாவுக்கரசரால் சிவ நெறியிலே சேர்க்கப்பட்ட பல்லவ மன்னன்.
அக்காலத்தில் சமணர்கள் சிறந்து வாழ்ந்த பாடலிபுத்திரம் என்ற ஊரில்
பாழிகளும் பள்ளிகளும் பல இருந்தன. சமண மதத்தை விட்டுச் சைவ
மதத்தைச் சார்ந்த அம் மன்னன் அங்கிருந்த பாழிகளையும் பள்ளிகளையும்
இடித்து திருவதிகை நகரில் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எடுத்து,
அதற்குக் குணதர ஈச்சுரம் என்னும் பெயர் கொடுத்தான்.1 இன்னும்,