பாண்டீச்சுரம்
பாண்டி நாட்டு ஆழ்வான் கோயில் என்னும் ஊரில் திருப்
பாண்டீச்சுரம் அமைந்திருந்ததென்று பழனி வட்டத்திலுள்ள பெரிய
கோட்டைச் சாசனம்
கூறுகின்றது.7
சோழீச்சுரம்
குறுநில மன்னராகிய முத்தரசரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றி
அரசாண்ட விசயாலயசோழன்
பெயரால் அமைந்த கற்கோயில்
புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலையில்
உள்ள தென்பர்.
விசாயலய
சோழீச்சுரம் என்பது
அதன் பெயர்.8 திரு நல்லம் என்பது தேவாரப்பாடல்
பெற்ற நகரம்.
“நல்லம் நல்லம் எனும்பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே”
என்ற திருப்பாட்டு பெற்றது அப் பதி. திருநல்லச் சடையார்க்குச் செம்பியன்
மாதேவி கற்கோயில்
கட்டினாள் என்றும்,
"ஆதித்தேச்சுரம்"
அக்கோயிலுக்குத் தன் கணவராகிய கண்டராதித்தர் பெயரை அமைத்தாள்
என்றும் கல்வெட்டுக் கூறுகின்றது.9 இங்ஙனம் அவர் பெயரால் அமைந்த
திருக்கோயில்
ஆதித்தேச்சுரம்
என வழங்கலாயிற் றென்பர். அங்குள்ள ஈசன்
திருவடியைத் தொழுகின்ற பான்மையில் கண்டராதித்தர்
வடிவம்
அமைக்கப்பட்டுள்ளது.10
இராஜராஜேச்சுரம்
தஞ்சை நகரத்தின் நல்லணியாகத் திகழும் பெரிய கோவில்
இராஜராஜன் என்னும் பெருநில மன்னனது |