கழிக்குடி யென்னும் மறு பெயருடைய கன்னியாகுமரியில் மற்றோர்
இராஜராஜேச்சுரம் காணப்படுகின்றது.
இப்பொழுது கிலமுற்றிருக்கும்
குகைநாதர் கோவிலே பழைய இராஜராஜேச்சுரம் என்பர்.13
இக் கோவில் நந்தா விளக்குக்காகச் சோழகுல வல்லி அளித்த
நன்கொடை கல்வெட்டால் அறியப்படுகின்றது.14 இராஜேந்திர சோழன்
காலத்தில் கன்னியாகுமரி கங்கை கொண்ட சோழபுரம் என்னும் பெயர்
பெற்றது.
தாராசுரம்
தாராசுரம் என்பது கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள ஓர் ஊர்.
அங்குள்ள சிவன் கோவில்
இராஜராஜேச்சுரம் என்று கல்வெட்டுக்களில்
குறிக்கப்படுகின்றது. ‘ராஜராஜ புரத்திலுள்ள ராஜராஜேச்சுரம்’ என்னும் சாசனத் தொடரால்15 இராஜராஜ சோழனுக்கும் அவ்வூருக்கும் உள்ள
தொடர்பு நன்கு விளங்குகின்றது ராஜராஜேச்சுரம் என்பது நாளடைவில்
ராராசுரம் ஆகக் குறுகிற்று.16
ராராசுரம் தாராசுரமாகத் திரிந்தது. தாராசுரக்
கோயிலின் கட்டுமானமும் தஞ்சைப் பெருங்
கோயில் முறையில்
அமைந்துள்ளது.
அரிஞ்சயேச்சுரம்
திருவல்லத்துக்கு வடக்கே யுள்ள மேற் பாடி என்னும் ஊரில் உள்ள
சிவாலயத்தின் பெயர் அரிஞ்சயேச்சுரம்.
முதற் பராந்தக சோழனுடைய மகன்
அரிஞ்சயன். அவன் நெடுநாள் அரசாளவில்லை
என்று தோன்றுகின்றது.
பாணர் நாட்டின்மீது
படையெடுத்துச் சென்ற அம் மன்னன்
போர்க்களத்தில்
வீழ்ந்து பட்டான்
என்று கருதுவர் பலர். பத்தாம்
நூற்றாண்டின் முற்பகுதியில் |