280ஊரும் பேரும்

பாண்டிநாட்டை யாண்ட வீர பாண்டியன் ‘சோழன் தலை கொண்ட
வீரபாண்டியன் என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப்படுதலால், அரிஞ்சயன்
தலை கொண்டவன் அவனே போலும்! இவ்வாறு அகால மரணமடைந்த
அரிஞ்சயன் பெயரால் இராஜராஜ சோழன் பள்ளிப் படையாகக் கட்டிய
ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று வழங்கப்பெற்றது.17 இக் காலத்தில் அக்
கோயிலின் பெயர் சோழேச்சுரம் என்பதாகும்.

கங்கைகொண்ட சோழேச்சுரம்

     இராஜேந்திர சோழனது விருதுப் பெயரால் அமைந்த நகரம் கங்கை
கொண்ட சோழபுரம். அந் நகரில் அம்மன்னம் கட்டிய சிவன் கோவில்
கங்கை கொண்ட சோழேச்சுரம் என்று பெயர் பெற்றது. அந் நாளில் ஆறு
கோபுரங்களோடும், அழகிய மதில்களோடும் விளங்கிய அவ்வாலயம் இன்று
மதில் இழந்து, மாண்பிழந்து நிற்கின்றது. ஆறு கோபுரங்களில் எஞ்சியுள்ளது
ஒன்றே. ஒன்பது அடுக்குள்ள அக் கோபுரத்தின் உயரம் நூற்றெழுபது அடி
என்பர். தஞ்சைப் பெருங் கோயிலைப் பாடிய கருவூர்த் தேவர் கங்கை
கொண்ட சோழேச்சுரத்தையும் பாடியுள்ளார்.

        
“பண்ணிநின் றுருகேன் பணிசெயேன் எனினும்
         பாவியேன் ஆவியுட் புகுந்தென்
         கண்ணினின் றகலா என்கொலோ கங்கை
         கொண்டசோ ழேச்சரத் தானே”