என்ற திருவிசைப் பாவால் அதன் பெருமை இனிது விளங்கும்.
நாஞ்சில் நாட்டில் உள்ள கோட்டாறு என்னும் நகரைக் குலோத்துங்க
சோழன் வென்று கைக்கொண்ட
பின்னர், அங்கு சிவன் கோவில் ஒன்று
கட்டுவித்து அதற்கு இராசேந்திர சோழேச்சுரம் என்று
பெயரிட்டான். அத்
திருக் கோயிலைச் சூழ்ந்த இடம் சோழபுரம் என்னும் பெயர் பெற்றது.
இக்
காலத்தில் நாகர் கோயிலின் ஒரு பகுதி சோழபுர மென்றும், அங்குள்ள
கோவில் சோழேச்சுரம்
என்றும் சொல்லப்படுகின்றன.18
இந் நாளில் வேப்பத்தூர் (தஞ்சை நாடு) என வழங்கும் திருந்துதேவன்
குடியில் கங்கை கொண்ட
சோழேச்சுரம் என்ற சிவாலயம் ஒன்று
இருந்ததாகத் தெரிகின்றது.19 முதற் குலோத்துங்க சோழன்
காலத்தில் திருச்சி
நாட்டிலுள்ள மேலப் பழுவூரில் இருந்த பழமையான செங்கற் கோவில்
புதுப்பிக்கப்பட்டுக் குலோத்துங்க சோழேச்சுரம் என்னும் பெயர் பெற்றது.20
அடிக் குறிப்பு
1. திருநாவுக்கரசர் புராணம், 146.
2. Pallavas, P.171.
3. S.I.I.,Vol.I.p.13.
4. 3 of 1887.
5. ஆழ்வார்கள் கால நிலை,137.
|