ஆப்பனூர்
மதுரைக்கு அருகே வைகையாற்றின் கரையில் ஓர் ஆப்பிலே தோன்றிய
ஈசன் ஆப்பன் என்று பெயர்
பெற்றார். அவர்
அமர்ந்த இடம் ஆப்பனூர்
ஆயிற்று. அப்பதியைப்
பாடினார் திருஞான சம்பந்தர்.
இப்பொழுது
ஆப்பனூர் திருவாப்புடையார் கோயில் என்று குறிக்கப்படுகிறது.
கன்றாப்பூர்
சோழ நாட்டில் கன்று கட்டிய ஒரு முளையினின்றும் இறைவன்
வெளிப்பட்டமையால் கன்றாப்பூர்
என்னும்
பெயர் அவ்வூருக்கு அமைந்த
தென்பர்.
“கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே”
என்னும் தேவாரத்தில் நடுதறி என்பது அங்குக் கோயில் கொண்ட ஈசன்
திருநாமம் என்று தெரிகின்றது.
இவ்வூர் இப்பொழுது கண்ணாப்பூர் என
வழங்கும்.2
கானூர்
கானகத்தில் அமைந்த கானூர் என்ற ஊரிலே
செழுஞ்சோலையினிடையே
முளைத்தெழுந்த
இறைவன் திருவுருவத்தைக் கானூர் முளையென்று
போற்றினார் திருநாவுக்கரசர். “காமற் காய்ந்தவன்
கானூர் முளைத்தவன்”
என்பது அவர் திருவாக்கு. இப்பொழுது அங்கு
ஊரில்லை. கோயில் மட்டும்
உள்ளது.3
பெருமுளை
கானூர் முளைபோல் எழுந்த மற்றொரு கோயில் மாயவர வட்டத்தில்
உள்ளது. அங்கு முளைத்த மூர்த்தியைப்
பெருமுளை
என்று அழைத்தனர்.
அப் பெயரே ஊர்ப் பெயரும்
ஆயிற்று. இப்பொழுது பெருமுளை என்னும் |